எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் மட்டு அம்பாறை ஜெயந்தன் படையனி....

வெள்ளையனையே கதிகலக்கிய வன்னியிது இன்று அந்தரத்தில் ஆடும் எங்கள் அவல வாழ்வை எண்ணி எந்த பொழுதிலும் இடிந்துவிடாதீர்கள். இன்றைய வதை பிரசவ வலியைப்போண்றது, வலியை தாங்குவதே சுக பிரசவத்திற்க்கான வழி. புதிய உயிர்ப்பொண்று வேண்டுமெனில் பொறுமை வேண்டும். பல்லை கடித்துத்தாங்கும் பக்குவம் வேண்டும். விடுதலைக்கான வழிநடத்தல் என்பது ஊரிபட்ட ஆக்கினைகளை சுமப்பது, தினசரி செடில் குற்றிய காவடி எடுப்பது போன்று. என்ன இது வாழ்வு என இப்போது சலிப்பு வருகிறதோ?. வேண்டாம். ஈழத்தமிழருக்கு இரண்டு வழி இல்லை ஒற்றை வழியே அது போராடிப்பெறுகின்ற தாயகம். சூரிய தேவனே உன் முன் நின்று உறுதியெடுக்கின்றோம் இனியும் எம் பயணம் தொடரும் இலக்கு எம் கையில் எட்டும் வரைக்கும்.
 


அடக்கு முறையாளர்கள் பெறும் வெற்றிகள் நிரந்தரமானதல்ல என்பதை சிங்கள தேசம் புரிந்துகொள்ள இன்னும் சொற்ப நாட்களே இருக்கின்றது.
மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கருமபுலிகள்.
 
Today, there have been 1 visits (1 hits) on this page!